தமிழ்நாடு

"' மூப்பில்லா தமிழ் தாயே"....கேப்ரியல்லாவுக்கு கிடைத்த வாய்ப்பு !!

"மூப்பில்லா தமிழ் தாயே" எனும் பாடலில் நடிக்க கேப்ரியல்லாவுக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் வாய்ப்பு வழங்கியுள்ளார்.

டிக் டாக்கில் பிரபலமாகி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர்  கேப்ரியல்லா செல்லஸ். இதையடுத்து 'கலக்க போவது யாரு' என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். பின்னர் 'ஐரா’ என்ற திகில் படத்தில் நயன்தாரா கதாபாத்திரத்தின் இளைய பதிப்பின் பாத்திரத்தை சித்தரிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் சினிமாவிலும் அறிமுகமானார்.

இந்நிலையில் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சுந்தரி' சீரியலில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் கேப்ரியெல்லா. இதனால் இவர் சின்னத்திரையில் மிகவும் பிரபலமாக நாயகியாக வளம் வருகிறார்.இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானுடன் பணிபுரியும்  வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளது. ரஹ்மான் தனது சுயாதீன ஆல்பமான "மூப்பில்லா தமிழ் தாயே" எனும் பாடலில் நடிக்கும் வாய்ப்பை கேப்ரியல்லாவுக்கு வழங்கியுள்ளார்என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து பேசிய கேப்ரியல்லா  "நான் கனவில் கூட நினைத்துப் பார்க்காதது நிஜத்தில் நடந்தது.மேலும்  எனக்கு வாய்ப்பு வழங்கிய ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நன்றி" என  தெரிவித்தார் 

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
14-Jun-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee