தமிழ்நாடு

சூர்யாவின் வக்கீல் லுக் !!

நடிகர் சூர்யாவின் 39-வது படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல்.

தமிழ் திரையுலகில் பல வெற்றிகளை கண்டு முன்னணி நடிகராக வலம்வரும் நடிகர்  சூர்யா தற்போது  இயக்குனர் ஹரி இயக்கத்தில் டி.ஜே.ஞானவேல் தயாரிப்பில் உருவாகிவரும்  "அருவா" படத்தில் கவுரவ வேடத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கர்ணன் பட நடிகை ரஜிஷா விஜயனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இருளர் பழங்குடியினரின் வாழ்க்கை மற்றும் பிரச்சனைகளை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தின்  படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், நடிகர் சூர்யா, பழங்குடியின மக்களுக்காக வாதாடும் வக்கீல் வேடத்தில் நடித்து வருவதாக கூறப்பட்டது. இந்நிலையில் அதனை உறுதிப்படுத்தும் வகையில், இப்படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
14-Jun-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee