தமிழ்நாடு

ரயில்களில் பொதுமக்கள் பயணிக்க தடை !

நாளை முதல் புறநகர் ரயில்களில் பொது மக்கள் பயணிக்க தடை.

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா  தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் வரும்  6ம் தேதி முதல் மளிகைகடை ,மருந்தகம், உணவகம் தவிர வேறு கடைகள் திறக்க அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில்  மக்களின் நடமாட்டம், கூட்டம் வருவதை கட்டுப்படுத்தும் விதமாக புறநகர் பகுதிகளுக்கு செல்லும் ரயில்களில் பொதுமக்கள் பயணிக்க கூடாது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது . 

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்தியில் "புறநகர் ரயில்களில் மத்திய , மாநில அரசு ஊழியர்கள், மாநகராட்சி ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள், போலீசார் , ஊடகத்துறையினர், முன்களப்பணியாளர்கள் ,வக்கீல்கள் மட்டுமே பயணிக்க வேண்டும். பொதுமக்கள் பயணிக்க தடை விதிக்கப்படுகிறது. இது வரும் 20 ம் தேதி வரை அமலில் இருக்கும் " என தெரிவித்துள்ளது 

மேலும் ,இது போல் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மாற்றுத்திறனாளிகள் அரசு அலுவலகத்திற்கு பணிக்கு வர வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
14-Jun-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee