தமிழ்நாடு

நகைசுவை நடிகர் பாண்டு காலமானார் !!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நகைசுவை நடிகர் பாண்டு சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

தமிழ் திரை உலகில் பிரபல நகைச்சுவை நடிகராக வளம் வந்த நடிகர்  பாண்டுவிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டது அதனை தொடர்ந்து அவரது  மனைவி குமுதாவிற்கும் ஏற்பட்டது .இதனால் அவர்கள் இருவரும்  சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை நடிகர் பாண்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மனைவி குமுதா, தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். பாண்டு - குமுதா தம்பதியினருக்கு பிரபு, பஞ்சு மற்றும் பின்டு ஆகிய 3 மகன்கள் உள்ளனர். 

கேப்பிடல் லெட்டர்ஸ் எனும் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி நடிகர் பாண்டு, பல்வேறு திரையுலக பிரபலங்களின் இல்லங்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர் பலகைகளை அழகுற வடிவமைத்து வந்தார். அதிமுக கட்சியின் கொடியை வடிவமைத்ததும் பாண்டு தான் என்பது குறிப்பிடத்தக்கது. பாண்டுவின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
14-Jun-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee