தமிழ்நாடு

எல்லோருக்கும் தைரியம் வர வேண்டும் ...நடிகை சமந்தா

கொரோனாவை எதிர்த்து போராடும் தைரியம் எல்லோருக்கும் வரவேண்டும் என நடிகை சமந்தா தெரிவித்துள்ளார் .

ந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா  தொற்றினால்  நாட்டில ஆக்சிஜன் உட்பட பல மருத்துவ  சாதனங்களுக்கு தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா நோயாளிகள் சுவாசிக்க மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள்.கொரோனா பரவலை தடுக்க பல தரப்பினர் தங்களது கருத்தை பகிர்ந்து வருகிறார்கள்.
 
இந்நிலையில் இது குறித்து பேசிய நடிகை  சமந்தா “நம்பிக்கை, நேர்மறை சிந்தனைகள் இரண்டும் எந்த மாதிரி கஷ்டமான நிலைமை வந்தாலும் நம்மை காப்பாற்றும். கொரோனா நம்மை சுற்றி முற்றுகையிட்டு இருக்கிறது. எல்லோருக்கும் மூச்சுத்திணறுவது மாதிரி எங்கு பார்த்தாலும் கொரோனா பயத்தில்தான் இருக்கிறார்கள். அந்த தொற்றை எதிர்த்து போராட முடியும் என்ற தைரியம் எல்லோருக்கும் இருக்க வேண்டும். கஷ்டம் வந்து விட்டது என்று உயிரை மாய்த்துக்கொள்வது, கொரோனா வந்து விட்டது என்று தற்கொலை செய்து கொள்வது என்றெல்லாம் செய்யக்கூடாது. தைரியத்தை மட்டும் இழக்கவே கூடாது.

கொரோனா தடுப்பு மருந்து எல்லோருக்கும் கிடைக்கும். கொரோனா தடுப்பு ஊசி எல்லோரும் போட்டு முடிக்கிற காலமும் விரைவில் வரும். முக கவசம் அணிந்து சமூக இடைவெளி கடைப்பிடித்து எச்சரிக்கையாக இருந்தால் நாம் கொரோனாவை ஜெயித்து விடலாம். நாம் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறோம். அதை தாண்டி வருவோம்’’ என கூறினார்

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
14-Jun-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee