தமிழ்நாடு

சித்த மருத்துவமனை கொரோனா சிகிச்சை மயமாக மாற்றப்பட்டது !

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் மத்திய அரசு நிறுவனமான தாம்பரத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவமனை கொரோனா சிகிச்சை மயமாக மாற்றப்பட்டு இன்று முதல் செயல்படத் தொடங்கியது.

தேசிய சித்த மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை மையம் தொடங்க இருப்பதால் அங்கு செயல்பட்டு வந்த வெளிநோயாளிகள் பிரிவு இம்மாதம் 1 ஆம் தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது உள்ள புற நோயாளிகள் பிரிவில் கொரோனா சிகிச்சைக்கு 100 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனை தாம்பரம் சித்த மருத்துவமனை இயக்குனர் மீனாகுமரி தொடங்கி வைத்தார்.

அந்த மையத்தில் கொரோனா பரிசோதனை மூலம் தொற்று உறுதி செய்யப்பட்ட பின்னர் மிதமான அறிகுறிகள் மற்றும் அறிகுறிகள் இல்லாதவர்கள் வீட்டு தனிமைக்கு அனுப்பப்பட்டவர்கள் அங்கு அனுமதித்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.சித்த மருத்துவ முறைப்படி சிகிச்சை கபசுரக் குடிநீர்,சித்த மருந்துகள் வழங்கப்படுகிறது. மேலும் மூச்சுப்பயிற்சி,யோகா பயிற்சி,ஆவி பிடித்தல் போன்ற பயிற்ச்சிகள் நோயாளிகளுக்கு அளிக்கப்படுகிறது.மேலும் சித்த மருத்துவத்தின் படி வீட்டுத் தனிமைக்கு செல்பவர்களுக்கு உளவியல் மற்றும் சமூகவியல் ஆலோசனைகளை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
14-Jun-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee