Trending News

ஐ.பி.எல் போட்டி நடைபெறாவிட்டால் ரூ.2,500 கோடி இழப்பு ஏற்படும்...பிசிசிஐ !!

கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐ.பி.எல். போட்டியை நாங்கள் முழுமையாக நடத்த முடியாமல் போனால் கிட்டத்தட்ட ரூ.2,500 கோடி இழப்பு ஏற்படும் என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்றிலும் பல பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி சுவாரசியமாக நடைபெற்று கொண்டிருந்தது 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி .இந்நிலையில் கிரிக்கெட் வீரராகலான வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியர் ,விருத்திமான் சஹா , பயிற்சியாளர்கள் எல்.பாலாஜி, மைக் ஹஸ்சி, அமித் மிஸ்ரா ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். கொரோனா தடுப்பு மருத்துவ உயிர் பாதுகாப்பு வளையத்தையும் மீறி வீரர்கள் இடையே எப்படி கொரோனா பரவியது என்பது தெரியாமல் இந்திய கிரிக்கெட் வாரியம் குழம்பி போய் உள்ளது. 4 அணிக்குள் கொரோனா ஊடுருவியதால் வேறு வழியின்றி ஐ.பி.எல். போட்டியை ஒத்திவைக்க வேண்டியதாகி விட்டது.

இந்நிலையில் இது குறித்து பேசிய  பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி "நடப்பு ஐ.பி.எல்.-ல் இன்னும் 31 ஆட்டங்கள் நடத்த வேண்டி உள்ளது. ஐ.பி.எல். போட்டியை நாங்கள் முழுமையாக நடத்த முடியாமல் போனால் கிட்டத்தட்ட ரூ.2,500 கோடி இழப்பு ஏற்படும். இது தொடக்கட்ட மதிப்பீடு தான்.20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முன்பாக எஞ்சிய ஐ.பி.எல். ஆட்டங்களை நடத்த வேண்டும் என்றால் அதற்குரிய காலஇடைவெளியை உருவாக்க வேண்டும். இதையொட்டி அனைத்து நாட்டு கிரிக்கெட் வாரியங்களுடனும் பேச வேண்டும். நிறைய விஷயங்கள் இதில் உள்ளடங்கி இருக்கிறது. எனவே அதற்கான வேலையை படிப்படியாக தொடங்குவோம்" என தெரிவித்துள்ளார்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
14-Jun-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee