லைப் ஸ்டைல்

மலர்களை கொண்டு சருமத்தை பராமரிக்க வேண்டுமா ?

இயற்கையான முறையில் சருமத்தை பராமரிக்க இதோ உங்களுக்கான சில டிப்ஸ் .

உலகில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பலர் தொற்றுக்கு அஞ்சு தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை . இதனால்  முகஅழகை பராமரிக்க அழகு நிலையங்களுக்கு செல்லும் பெண்கள்  சற்று சிரமப்படுகிறார்கள். அவர்கள் வீட்டில் இருந்தபடியே இயற்கை முறையில் தங்கள் சருமத்தை பாதுகாப்பது எப்படி என இந்த குறிப்பில் காண்போம்.


1. ரோஜா : சருமத்தில்  ஈரப்பதத்தை தக்கவைக்கும்  சில ரோஜா இதழ்களை சிறிய உரலில் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைக்க வேண்டும். அதனுடன், ஒரு தேக்கரண்டி பால் மற்றும் கிளிசரின் சேர்த்து, பின்னர் அதை முகத்தில் தடவுவதன் மூலம் உங்கள் சருமம் பிரகாசமாகும். இந்த ரோஜா  ஃபேஸ் பேக்கை 20 நிமிடங்கள் முகத்தில் தடவி பின்னர் கழுவ வேண்டும். இவ்வாறு சேட்டுவந்தால் சருமம் பளபளக்கும் 

2. தாமரை :  முகத்தில் சுருக்கங்களை குறைக்க விரும்புவர்கள்,சில தாமரை இதழ்களில் உள்ள சாற்றினை எடுத்து அத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து ஒரு தேக்கரண்டி பால் மற்றும் கடலை மாவு  சேர்த்து நன்கு மசிக்க வேண்டும். இந்த ஃபேஸ் பேக் உங்கள் முகத்தில் தடவி 15 நிமிடங்களுக்கு பிறகு முகத்தை கழுவ வேண்டும்.இவ்வாறு செய்து வந்தால்  உங்கள் சருமத்தின் மென்மை அதிகரிக்கும், மேலும் வயதான தோற்றத்தை குறைக்க உதவும்.

3. மல்லிகை : மல்லிகை மலர்கள் , சருமத்தை பிரகாசமாக ஒளிர வைக்க உதவுகிறது . மல்லிகை பூவின் சாற்றை எடுத்து அதனுடன் ஒரு தேக்கரண்டி காய்ச்சாத பால் மற்றும் கடலை மாவு சேர்த்து உங்கள் முகத்தில் தடவவும். 15 முதல் 20 நிமிடங்களுக்குப் பிறகு உங்கள் முகத்தை கழுவினால், உங்களுக்கு தேவையான பளபளப்பைப் பெறுவீர்கள். 

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
14-Jun-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee