Trending News

கொரோனா பரவல் காரணமாக ஓடும் பேருந்தில் சீன மாணவியை தாக்கியவருக்கு வீட்டுக் காவல் தண்டனை!!

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு கனடா தொராண்டோவில் சீன மாணவி மீது இனவாத ரீதியாக தாக்குதலில் ஈடுபட்ட கனேடியருக்கு வீட்டுக் காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஒட்டாவா:
கனடா தொராண்டோ கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம்  சீனாவைச் சேர்ந்த  மாணவி  நகர பேருந்து ஒன்றில் பயணம்  செய்துகொண்டிருந்த போது அதே பேருந்தில் ஏறிய கனடாவை சேர்ந்த  47 வயதான மைக்கேல் ஹென்னசி, மாஸ்க் அணிந்தபடி தமது வேலையில் கவனம் செலுத்தியபடி இருந்த சீனத்து மாணவியை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.அதுமட்டுமின்றி, உங்களால் தான் உலக நாடுகளுக்கு இந்த நிலைமை, உங்கள் நாட்டுக்கே போய்விடுங்கள் என கத்தியுள்ளார்.

அந்த சமையம் அந்த மாணவி, ஹென்னசியின் நடவடிக்கைகளை தமது மொபைலில் பதிவு செய்து வந்துள்ளார். இதை கவனித்த ஹென்னசி, அந்த மொபைலை பறிக்கும் நோக்கில் அந்த மாணவியை தாக்கியுள்ளார்.இதனால் தன்னை தற்காத்துக்கொள்ள  மாணவியும் ஹென்னசியை திருப்பித் தாக்கியுள்ளார். மொபைலை அவர் விட்டுத்தரவில்லை என்றே நீதிமன்ற ஆவணங்களில் பதிவாகியுள்ளது.இந்த வழக்கை விசாரித்த  ஒன்ராறியோ நீதிமன்ற நீதிபதி, உடல்ரீதியான தாக்குதல் ஒப்பீட்டளவில் சிறியது, ஆனால் பாதிக்கப்பட்டவருக்கு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது என சுட்டிக்காட்டியுள்ளார் எனவே இந்த  வழக்கில் ஹென்னசி குற்றவாளி என கடந்த மாதம் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது. இந்த நிலையில் நான்கு மாத வீட்டுக் காவல் தண்டனையும், 30 மணி நேர சமூக சேவையும் ஹென்னசிக்கு தண்டனையாக விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
14-Jun-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee