தமிழ்நாடு

தமிழகத்தில் முழு ஊரடங்கு .... மூட்டை மூட்டையாக மது வாங்கி சென்ற மது பிரியர்கள் !!

ஈரோடு மாவட்டம் பவானியில் குடிமகன்கள் மூட்டை மூட்டையாக மது வாங்கி சென்றனர்.

தமிழகத்தில்  கொரானா இரண்டாம் அலை பாதிப்பு அதிகமாக உள்ளதால் தமிழக அரசு கொரோனா  நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.இதனைத் தொடர்ந்து வருகின்ற 10-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது என இன்று காலை தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும், அத்தியாவசிய பொருட்கள் கடைகள் மட்டும் 12.00 மணி வரை நடத்திக் கொள்ளலாம் எனவும் டாஸ்மார்க் கடைகள் திறக்கப்படாது என அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.இதனைத் தொடர்ந்து இன்று பவானி அந்தியூர் மெயின் ரோட்டில் உள்ள அரசு டாஸ்மார்க் கடை முன்பு காலை முதலே குடிமகன்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது .பின்னர் தங்களுக்கு  தேவையான மது பாட்டில்களை தாங்கள் கொண்டு வந்த பைகள் மற்றும் மூட்டைகளில் அடுக்கி வைத்து கொண்டு மூட்டையாக வாங்கி கொண்டு சென்றனர் மது பிரியர்கள்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
14-Jun-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee