Trending News

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள ரகசிய எண் அறிமுகம் !!!

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு கோ-வின் இணையதளத்தில் முன்பதிவு செய்ய 4 இலக்க ரகசிய எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள விரும்புவோர் ‘கோ-வின்’ இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.இதில் பதிவு செய்தவர்களுக்கு குறிப்பிட்ட தேதி மற்றும் நேரம் அனுப்பி வைக்கப்படுகிறது. அந்த நாளில் சம்மந்தப்பட்டவர்கள் குறிப்பிட்ட மையத்திற்கு சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

இந்தியாவில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது .இந்நிலையில் கொரோன தடுப்பூசி செலுத்திக்கொள்ள விரும்புவோர் ‘கோ-வின்’ இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. 45 வயதை கடந்தோர் கோ-வின் இணையதளத்தில் பதிவு செய்யாமல் நேரடியாக சென்றும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முடியும். ஆனால் 18 முதல் 44 வயதுக்குட்பட்டோர் கோ-வின் இணையதளத்தில் பதிவு செய்யவேண்டியது கட்டாயம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த இணையதளத்தில் முன்பதிவு செய்த சிலர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள செல்லாவிட்டாலும், அவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக தவறான தகவல் வந்துவிடுகிறது.மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்துபவர், தடுப்பூசி செலுத்திக் கொண்டவரின் விவரத்திற்கு பதிலாக வேறு நபர்களின் விவரங்கள் உள்ளீடு செய்துவிடுவதால், இந்த தவறு நிகழ்வது கண்டறியப்பட்டது.இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு கோ-வின் இணையதளத்தில் முன்பதிவு செய்ய 4 இலக்க ரகசிய எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.

இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் "கோ-வின் இணையதளத்தில் தடுப்பூசிக்காக முன்பதிவு செய்யும் போது 4 இலக்க ரகசிய எண் அனுப்பி வைக்கப்படும். தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான நாள், நேரம் போன்ற தகவல்களை பெற்றவர்கள் மையத்திற்கு செல்லும்போது அந்த 4 இலக்க எண்ணை தடுப்பூசி போட்டுக்கொள்ளும் மையத்தில்  தெரிவிக்க வேண்டும். அப்படி தெரிவிப்பவர்களுக்கு தடுப்பூசி போட்டதற்காக வழங்கப்படும் மின்னனு சான்றிதழில் அந்த 4 இலக்க எண் இடம் பெறும்" என கூறப்பட்டுள்ளது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
14-Jun-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee