Trending News

தாயுடன் சேர்ந்து ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக உணவு வழங்கிவரும் இளைஞர் !!

கொரோனாவால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு பசியால் வாடும் ஏழை எளிய மக்களுக்கு தனது தாயுடன் சேர்ந்து உணவுகள் வழங்கி உதவும் இளைஞர்.

மும்பை:
உலகில்  கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்துவது மிகவும் சவாலாக உள்ளது.அதுவும் கொரோனா 2 ஆம் அலை இந்தியாவை  மிகவும் ஆட்டி படைத்தது வருகிறது,அதனை கட்டுப்படுத்த அரசு பல கட்டுப்பாடுகளை விதித்தாலும் கட்டுப்பாடுகளை மீறி நோய் தீயாக பறவை வருகிறது.

அரசின் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு பலர் வெளியே செல்வதை தவிற்கின்றனர் .இதனால் ஏழை எளிய மக்கள் பொருளாதார ரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். நாள்தோறும் உணவுகளை வீணாக்கும் இவ்வுலகில் ஒரு நாள் ஒரு பிடி உணவு கூட கிடைக்காத என பலர் ஏங்குகிறார்கள். இதனால்  ஏழை எளிய குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழலில் பல தன்னார்வலர்கள் கஷ்டப்படும் மக்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை  செய்து  வருகிறார்கள்.

இந்நிலையில் மும்பையில் ஹர்ஷ் தாலி அண்ட் பராந்தாஸ்  என்னும் உணவகத்தை  ஹர்ஷ் மாண்டவியா என்பவர் தனது தாய் ஹீனா மாண்டவியா உடன் சேர்ந்து நடத்தி வருகிறார். கொரோனா காலத்தில் உணவு இல்லாமல் தவிக்கும் ஏழை எளியவர்கள்  பலருக்கு இலவசமாக உணவு வழங்கி பசியை போக்கி  வருகின்றனர்.பசியால் வாடுபவர்களுக்கு இவர்கள் செய்யும் உதவி இணையதளத்தில் வைரலாகி வருகிறது. 

இது குறித்து பேசிய ஹீனா மாண்டவியா" எனது கணவர் இறந்த பிறகு எனது மகனை நன்றாக படிக்கவைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வீட்டில் இருந்து உணவு பொருட்களை செய்வேன் அதனை என் மகன் சென்று விற்பான். பிறகு ஒரு வாடிக்கையாளர் ரூபாய் 70,000 தந்து உதவி மேலும் வாடகைக்கு ஒரு இடத்தை தந்தார்.அதில் நாங்கள் இருவரும் சேர்ந்து ஹர்ஷ் தாலி அண்ட் பராந்தாஸ் என்னும் ஒரு உணவகத்தை திறந்தோம்" என தெரிவித்தார்.


https://fb.watch/5mbriyg-iB/

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
14-Jun-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee