தமிழ்நாடு

அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் ....நடிகை குஷ்பு!

கொரோனா காலத்தில் மக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த 
பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில்  வெற்றிபெற்ற திமுக தலைவர் மு.க ஸ்டாலின் நேற்று முதல்வராக பதவி ஏற்றார்.இந்நிலையில் தமிழகத்தில் பரவும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முழு ஊரடங்கு பிறப்பித்தும் புதிய கட்டுப்பாடுகள் விதித்தும்  அறிக்கை வெளியிட்டார்.அவரின் இந்த அறிக்கையை பலர் வரவேற்று வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து நடிகை குஷ்பு தனது ட்விட்டர்  பக்கத்தில் "தமிழக மக்கள் அனைவரும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கு ஒத்துழைப்பு அளித்து இணைந்து செயல்பட வேண்டும். கொரோனோவுக்கு எதிரான போரில் அரசால் மட்டும் எல்லாவற்றையும் செய்ய முடியாது. மக்களின் பங்கும் முக்கியமானது. நம்மால் முடிந்த ஒத்துழைப்பை நாம் அளிப்போம்" என பதிவிட்டுள்ளார் 

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
14-Jun-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee