தமிழ்நாடு

ரெம்டெசிவர் மருந்து கோவை அரசு மருத்துவ கல்லூரியில் விற்பனை !!

கொரோனா தொற்றுக்கு பயன்படுத்தும் ரெம்டெசிவர் மருந்து கோவை அரசு மருத்துவ கல்லூரியில் விற்பனைக்கு வந்துள்ளது.

தமிழகத்தில்  கொரோனா  தொற்று இரண்டாம் அலை அதிகரித்து  வரும் நிலையில்  தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து வருகிறது. இந்த கொரோனோ தொற்றுக்கு பயன்படுத்தும்  ரெம்டெசீவர் மருந்து  தமிழகம் முழுவதும் விற்பனை செய்ய அரசு  நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன் ஒருபகுதியாக கோவை அவினாசி சாலையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் இன்று முதல் ரெம்டெசீவர் மருந்து விற்பனைக்கு வந்துள்ளது.  

இதனை  வாங்க வரும் நபர்கள் நோயாளியின் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை, சி.டி. ஸ்கேன் பரிசோதனை, ஆதார் அடையாள அட்டை மற்றும் வாங்க வருவோரின் ஆதார் அடையாள அட்டை,மருத்துவர் பரிந்துரை அசல்  போன்றவற்றை கட்டாயம் கொண்டு வர வேண்டும் என கூறியுள்ள சுகாத்துறையினர்  ஒரு வயல் மருந்து 1,568 ரூபாய்க்கும் ஆறு வயலின் விலை 9704 க்கும் என தினமும் ஐநூறு வரை விற்கப்படும் என தெரிவித்துள்ளனர்.மேலும் மருந்தினை வாங்க வரும் அனைவரும் முக கவசம் அணிந்திருக்க  வேண்டும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர் போலீசார் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
14-Jun-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee